இரண்டரை லட்சத்தை சில்லறையாக கொட்டி பைக் வாங்கிய இளைஞர்.. பின்னணியில் அழகான காரணம்

இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புடைய இருசக்கர வாகனம் வாங்குவதற்கான பணத்தை ஒரு ரூபாய் நாணயங்களாக வழங்கிய இளைஞரின் வித்தியாசமான செயல் கவனம் ஈர்த்துள்ளது.

சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த பூபதி என்பவர், யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். சேமிப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையில் வித்தியாசமான வீடியோ உருவாக்க அவர் திட்டமிட்டார். அதற்காக இரண்டரை லட்சம் ரூபாயை, ஒரு ரூபாய் நாணயங்களாக மாற்றி, அதைக்கொடுத்து இருசக்கர வாகனம் வாங்க முடிவு செய்தார். அதற்கான பணியில் இறங்கிய பூபதி வங்கிகள், கடைகள் மற்றும் முக்கிய கோயில்களில் ரூபாய் நோட்டுகளை கொடுத்து, அதற்கு பதில் ஒரு ரூபாய் நாணயங்களை பெற்றுள்ளார்.

பின்னர் பைக் விற்பனை நிறுவனத்தின் ஒப்புதலோடு தான் மூட்டைகளில் சேமித்து வைத்திருந்த 1 ரூபாய் நாணயங்களை கொடுத்து, இருசக்கர வாகனத்தை வாங்கிச் சென்றார்.

இதையும் படிக்க: மூன்று பேரிடம் ஒரே வீட்டை லீசுக்கு விட்டு ஏமாற்றிய தரகர் கடத்தல்: மீட்ட போலீஸார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post