மதுரவாயலில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் போலீஸ் காவலர் சாம்பியன் பட்டம் வென்றார்.
சென்னை மதுரவாயலில் உள்ள எவர்லாஸ்ட்பிரேவ் இண்டர்நேஷனல் அகடமியில் ஆண்டிற்கு இருமுறை குத்துச்சண்டை போட்டி நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டிற்கான முதல் போட்டியில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட தாம்பரம் கமிஷ்னர் அலுவலகத்தில் பணிபுரியும் இரண்டாம் நிலை காவலர் வீரமணி, தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நடைபெற்ற நான்கு சுற்றுகளிலும் மோதிய அனைவரையும் வீழ்த்தி வெற்றிக் கோப்பையையும், சாம்பியன் பட்டத்தையும் வென்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Tags:
News