வேலை கிடைக்காத விரக்தி - கபடி வீராங்கனை எடுத்த விபரீத முடிவு

வேலை கிடைக்காத விரக்தியில் கபடி வீராங்கனை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாங்காடு அடுத்த மதனந்தபுரம், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் காய்கறி வியாபாரி தர்மராஜ். இவருக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில். இவர்களது இளைய மகள் பானுமதி (25),; முதுகலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படித்து வந்தார். மேலும் இவர் மாநில மற்றும் தேசிய அளவிலான கபடி போட்டியிலும் பங்கேற்று விளையாடியுள்ளார்.

image

இந்நிலையில், நேற்று மதியம் வீட்டிற்கு வந்த பானுமதி அறையில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் பானுமதி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பானுமதி உடலை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து அவரது செல்போனை பறிமுதல் செய்து விசாரித்தனர். வேலை கிடைக்காத காரணத்தால் தற்கொலை செய்து கொண்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் மேலும் வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா என்ற கோணத்தில் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post