
தொட்டியம் ஒன்றியம் தோளூர்பட்டி ஊராட்சி கார்த்திகைபட்டியில் நாய்கள் கடித்ததிpல் 13 ஆடுகள் உயிரிழந்தன.
தொட்டியம் அருகே உள்ள கார்த்திகைபட்டியைச் சேர்ந்தவர் தவசுமணி என்பவரின் மனைவி புள்ளாச்சி (47). இவர் 30-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் இவர், வழக்கம்போல ஆடுகளை மேய்த்து விட்டு தோட்டத்தில் உள்ள பட்டியில் அடைத்துவிட்டு ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளார். பின்னர் வாங்கிய பொருட்களைவ Pட்டில் வைத்துவிட்டு தோட்டத்தில் இருந்த ஆடுகளை பார்க்கச் சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்து நாய்கள் ஓடிய நிலையில், ஆடுகள் அடைத்திருந்த பட்டியின் உள்ளே சென்று பார்த்தபோது ஆடுகள் கத்திக் கொண்டிருந்தன மேலும் 13 ஆடுகள் இறந்து கிடந்தன. மேலும் 6 ஆடுகள் படுகாயம் அடைந்து இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக கிராம நிர்வாக அலுவலர் மற்றும் மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நாய்கள் அதிகம் வெறிபிடித்து திரிவதால் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் இறந்த ஆடுகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News