கோவையில் சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதி மீட்பு

கோவையில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதி காரில் கடத்தப்பட இருந்த நிலையில், பொதுமக்களும் போக்குவரத்து காவல் துறையினரும் அவர்களை மீட்டனர்.

கோவை - லட்சுமி மில் சிக்னலில் நின்றிருந்த காரிலிருந்து ஒரு இளைஞரும் இளம்பெண்ணும் தாங்கள் கடத்தப்பட்டு தாக்கப்படுவதாக கூச்சலிட்டனர். இதைக் கண்ட வாகன ஓட்டிகள், போக்குவரத்து காவல்துறையினர் உதவியுடன் இருவரையும் மீட்டு பந்தய சாலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் மணியக்காரம்பாளையம் விக்ணேஸ்வர் - சரவணம்பட்டி ஸ்னேகா என்ற அந்த காதல் ஜோடி, வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், திருமணத்துக்கு பெண் வீட்டினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

image

அதை மீறி அவர்கள் திருமணம் செய்ததால், பெண்ணின் தரப்பினர் அவர்களை காரில் ஏற்றி விக்ணேஸ்வரனை தாக்கியபோது பிடிபட்டது விசாரணையில் தெரியவந்தது. இந்த விவகாரம் பற்றி ஏற்கனவே சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் பதிவாகியிருந்ததால், அவர்கள் அங்கு அனுப்பப்பட்டனர்.

Post a Comment

Previous Post Next Post