தமிழகத்தின் பல்வேறு தேவாலயங்களில் சாம்பல் புதன் வழிபாடுகளுடன், கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியுள்ளது.
இயேசு சிலுவையில் மரித்து, அடக்கம் செய்யப்பட்ட மூன்றாம் நாள், உயிர்த்தெழும் ஈஸ்டர் பெருவிழாவுக்கு, முந்தைய 40 நாட்களை தவக்காலமாக கிறிஸ்தவர்கள் பின்பற்றுகின்றனர். அவ்வாறு தவக்காலத்தின் முதல்நாள், சாம்பல் புதனாக அனுசரிக்கப்படுகிறது. அதற்காக, சென்னை சாந்தோம் தேவாலயத்தில், சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடைபெற்றது. தவக்காலம் தொடங்கியதன் அடையாளமாக திருப்பலியில் பங்கேற்றவர்கள் நெற்றியில், சாம்பலால் சிலுவையிட்டனர்.
இதேபோல நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்புத் திருப்பலியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு பாதிரியார்கள் பக்தர்களின் நெற்றியில் சாம்பல் பூசும் நிகழ்வு தவிர்க்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு நோய் பரவல் குறைந்ததால், வழக்கம்போல பொதுமக்களுக்கு பாதிரியார்கள் நெற்றியில் சாம்பலிட்டனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News