திமுக தலைமை உத்தரவை மீறி, தருமபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சியின் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்ட திமுக கவுன்சிலரை ராஜினாமா செய்ய விசிகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.
விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட பொ.மல்லாபுரம் பேரூராட்சியில், திமுக கவுன்சிலர் சாந்தி என்பவர் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தலைவராக பதவி ஏற்றார். இந்த நிலையில், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், அறிக்கைக்கு பிறகும், இவர் ராஜினாமா செய்ய முன்வரவில்லை.
மாவட்ட செயலாளர், மாநில நிர்வாகிகள் பலர் பேச்சுவார்த்தை நடத்தியும் பதவி விலகாத சாந்தி, "தான் பதவி விலக முடியாது என்றும் தன்னை கட்சியை விட்டு வேண்டுமானால் நீக்கிக் கொள்ளுங்கள்" என தெரிவித்து வருகிறார். இதனால் இரு கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Tags:
News