20 நாட்களில் ஏற்றத்தையும் இறக்கத்தையும் கண்ட தங்கத்தின் விலை: இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் 20 நாட்களில் ஆபரணத் தங்கத்தின் விலை 2,000 ரூபாய் குறைந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 18 ரூபாய் விலை குறைந்து 4,826 ரூபாய்க்கும், ஒரு சவரன் 144 ரூபாய் விலை இறங்கி 38,608 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு 40 காசுகள் விலை குறைந்து 73 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

image

உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக, தங்கம் ஒரு சவரன் விலை கடந்த மார்ச் 7ஆம் தேதி 40,840 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்ததால் அதன் விலை குறையத் தொடங்கியது. 20 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 2 ஆயிரத்து 232 ரூபாய் விலை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: தொடர்ந்து 6ஆவது நாள் - இன்றும் உயர்ந்த பெட்ரோல் டீசல் விலை! விலை நிலவரம் என்ன?

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post