
செங்கல்பட்டு பாலாற்றில் பழைய பாலத்தில் நடந்து வந்த சீரமைப்புப்பணிகள் முடிவடைந்த நிலையில், இன்று நள்ளிரவு முதல் அந்த வழியில் வாகனங்களை அனுமதிக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை இயக்குநரகம் முடிவு செய்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் இருகுன்றம்பள்ளி மாமண்டூர் இடையிலான பாலாற்றின் மீது 633 மீட்டர் நீளத்தில் இரண்டு பாலங்கள் அமைந்துள்ளன. பாலங்கள் பழுதடைந்துள்ளதால் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டு சென்னை திருச்சி மார்க்கத்தில் உள்ள பழைய பாலத்தில் பணிகள் 7ஆம் தேதி தொடங்கி 16 நாட்களாக சீரமைப்புப்பணிகள் நடந்துவந்தன.
இப்பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. இதனால், பழைய பாலத்தின் வழியாக சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் இன்று நள்ளிரவு முதல் அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், புதிய பாலத்தில் பராமரிப்பு பணிகள் மார்ச் 20ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்பணிகள் முடியும் வரை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட போக்குவரத்து மாற்றம் நீடிக்கும் நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News