பிள்ளைகளை கொஞ்சி மகிழும் ஜி.பி. முத்து
பிள்ளைகளை கொஞ்சி மகிழும் ஜி.பி. முத்து, தன்னை பிரிந்து பிள்ளைகள் வாடிப் போய்விட்டன என்று கூறி,
அவர்களுக்கு பிரியாணியை ஊட்டி விடுகிறார்.
பிரபல யூடியூபராக இருக்கும் ஜி.பி.முத்து பிக் பாஸ் சீசன் 6 போட்டியில் பங்கேற்று இருந்தார். இந்த போட்டியில் அசிம், ஆயிஷா, விக்ரம், ராபர்ட் மாஸ்டர், ஜனனி உள்ளிட்ட பல்வேறு போட்டியாளர்கள்
பங்கேற்றனர். இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பெரும்பாலான ரசிகர்கள் ஜிபி முத்துவின் நடவடிக்கையை அதிகம் ரசித்தனர்.
நிகழ்ச்சி தொடர்பான பெரும்பாலான புரோமோக்களில் ஜி.பி. முத்துவின் காட்சிகளே ஆக்கிரமித்திருந்தன. ஒரு கட்டத்தில் ஜிபி முத்துவை மையமாக வைத்தே பிக்பாஸ் நிகழ்ச்சி நடப்பதாக ரசிகர்களுக்கு எண்ணம் தோன்றியது. இதனால் ஜி.பி.முத்து வைத்துதான் பிக்பாஸ் ஓடுகிறது என்ற தொனியில் ரசிகர்கள்.
இந்த நிலையில் அதிர்ச்சி தரும் விஷயமாக பிக்பாஸ் முன்னணி போட்டியாளர் ஜி.பி. முத்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார். நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி தனது பிள்ளைகளுடன் முத்து பிரியாணி சாப்பிடும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் ‘நண்பர்களே சற்று முன்பு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டேன். பிள்ளைகள் என்னைத்தேடி வாடி விட்டன. என் பிள்ளைகளுக்கு
பிரியாணி என்றால் ரொம்ப பிடிக்கும். நானும் என் மகன் விஷ்ணுவுடன் சேர்ந்து சாப்பிட போகிறேன்’ என்று கூறி பிள்ளைகளுடன் ஜி.பி.முத்து சேர்ந்து சாப்பிடுகிறார்.
அப்போது பிள்ளைகளை கொஞ்சி மகிழும் ஜி.பி. முத்து, தன்னை பிரிந்து பிள்ளைகள் வாடிப் போய்விட்டன என்று கூறி, அவர்களுக்கு பிரியாணியை ஊட்டி விடுகிறார். ஃபேஸ்புக்கில் ஜி.பி. முத்து வெளிட்டுள்ள இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
ஜி.பி. முத்து பிக் பாஸில் இருந்து வெளியேறியதை வரவேற்றை அவரது ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.