பத்திரிகையாளர் உயிரிழந்த விவகாரம்: சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு
'புதிய தலைமுறை' பத்திரிக்கையாளர் முத்துகிருஷ்ணன் உயிரிழந்ததின் எதிரொலியாக கட்டுமான பணிகளுக்கு முறையான பாதுகாப்புகளை ஏற்படுத்த வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் மழைநீர் வடிகால் கால்வாயில் பத்திரிகையாளர் முத்துகிருஷ்ணன் இறந்ததன் எதிரொலியாக சென்னை மாநகராட்சி அனைத்து ஒப்பந்ததாரர்களுக்கும் வாய்மொழியாக சில உத்தரவுகளை வழங்கியிருக்கிறது. அதன்படி, கட்டுமானப் பணிகளுக்கு முறையான பாதுகாப்புகளை ஏற்படுத்த வேண்டும்.
பணி ஆரம்பம் முதல் முடியும் இடம் வரை இரும்பு தடுப்புகள் கொண்டு ஏற்படுத்தி பணிகளை மேற்கொள்ள வேண்டும். இன்று இரவுக்குள் அனைத்து இடங்களிலும் இரும்பு தடுப்புகள் நிறுவி அதனை புகைப்படமாக எடுத்து அனுப்பி வைக்க வேண்டும். இந்த உயிரிழப்பு ஒரு முக்கியத்துவமாக எடுத்துக் கொண்டு அனைவரும் இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சியின் பணிகளின் துணை ஆணையர் பிரசாந்த் உத்தரவிட்டுள்ளார்.