இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளி கட்டடத்தை அகற்றக் கோரி மாணவ மாணவியர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சத்தியமங்கலம் காவல் நிலையம் எதிரே உள்ள சத்திய மூலம் நகராட்சி பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை 508 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்குள்ள 11வகுப்பு அறையின் அருகில் இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி கட்டடத்தில் சாப்பிட வேண்டியுள்ளது.
இந்நிலையில், இந்த கட்டடம் எந்த நேரத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த கட்டடத்தின் மேற்கூரைகள் ஓடுகள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உள்ளது. இதனால் குழந்தைகள் சாப்பிடும் போது விபத்து ஏற்படும் முன்பே நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 200க்கு மேற்பட்ட பள்ளி மாணவர்கள் சத்தியமங்கலம் காவல் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Tags:
News