தஞ்சாவூர் அரசுப் பள்ளி மாணவி தற்கொலை: ஆங்கில ஆசிரியர் கைது

அரசுப்பள்ளி மாணவி தற்கொலை செய்ய காரணமாக இருந்ததாக ஆங்கில ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் வடசேரி கிராமத்தைச் மாணவி ஒருவர், வடசேரியில் உள்ள அரசுப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயின்று வந்தார். 

image

இந்நிலையில் மாணவர்களுக்கு தேர்வு நடைபெறுவதால் நேற்று காலை பள்ளிக்குச் சென்ற மாணவி, 11:30 மணி அளவில் வீட்டிற்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் மாணவி வகுப்பில் இல்லாததால் சந்தேகமடைந்த ஆசிரியர்கள் மாணவியின் வீடு தெரியாததால் மாணவியை தேடி அலைந்துள்ளனர்.

இதனையடுத்து மாணவியின் சகோதரனிடம், வீட்டில் சென்று பார்த்து வருமாறு ஆசிரியர்கள் கூறியுள்ளனர். சிறுவன் வந்து பார்த்தபோது மாணவி தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டுள்ளார். சிறுவனின் சப்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

image

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பாப்பாநாடு போலீசார் உயிரிழந்த மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் பள்ளி ஆசிரியர்கள் மாணவியின் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், ஆங்கில ஆசிரியர் கணேசன் தகாத வார்த்தைகளால் திட்டியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது. இதையடுத்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த வடசேரி அரசு மேல்நிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியர் கணேசனை (31) பாப்பநாடு போலீசார் கைது செய்தனர்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post