ஹேன்ட் பிரேக் போடாததால் லாரி மோதி ஓட்டுநர் உயிரிழப்பு - அதிர்ச்சி சிசிடிவி காட்சி

கோவையில் ஹேன்ட் பிரேக் போடாமல் லாரியை நிறுத்தியதால், அதன் ஓட்டுநர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

கருமத்தம்பட்டி அருகே கிருஷ்ணாபுரத்தில், சேலத்தை சேர்ந்த சுரேஷ்பாபு என்ற லாரி ஓட்டுநர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ரத்த காயத்துடன் உயிரிழந்து கிடந்தார். கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் காவலர்கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

image

அதில், லாரியை சாலையோரம் நிறுத்தி விட்டு, ஹேன்ட் பிரேக் போடாமல் இயற்கை உபாதை கழிக்க சுரேஷ்பாபு சென்ற போது, எதிர்பாராதவிதமாக லாரி அவர் மீது மோதி உயிரிழந்தது உறுதியானது.

இதையும் படிக்க: இப்படியெல்லாம் மோசடியா! ரூ78 லட்சத்தை இழந்த தொழில் முனைவோர்-களத்தில் இறங்கிய சைபர் க்ரைம்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post