சென்னை: 2021-ல் சிறைபிடிக்கப்பட்ட 47 தமிழக மீனவர்கள் தமிழகம் திரும்பினர்

இலங்கை கடற்படையால் 2021 ஆண்டு சிறைபிடிக்கப்பட்ட 47 தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் விடுவிக்கப்பட் நிலையில், இன்று அதிகாலை விமானம் மூலம் தமிழகம் திரும்பினர்.

கடந்த டிச.19, 2021ல் ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 56 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில், 27 பேர் ராமநாதபுரத்தையும், 20 பேர் புதுக்கோட்டையையும் சேர்ந்தவர்கள். மீனவர்களின் 7 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

image

இதையடுத்து ராமேஸ்வரம் புதுக்கோட்டை தஞ்சாவூர் மாவட்ட மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் மீனவர்கள் மற்றும் மீனவர்களின் படகுகள் மீட்பது தொடர்பாக தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது.

image

இந்நிலையில் கடந்த வாரம் 9 மீனவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், மீதமிருந்த 47 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டு, கொழும்பில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர். அவர்களை வரவேற்ற தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் தனி வேன்களில் ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டைக்கு அழைத்துச் செல்கின்றனர்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post