'உங்கள் அன்பால் ஊக்கத்தை உழைப்பாய் மாற்றிடுவேன்' - முதல்வர் மு.க.ஸ்டாலின்

'இயற்கையோடு இயைந்து தமிழர்கள் நாம் கொண்டாடும் பொங்கல் திருநாளான இன்று, பிளாஸ்டிக் பைகளை இனிப் பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டு மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துவோம்' எனத் தெரிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்ட பதிவில், "தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழர் திருநாள் - தமிழ் இனநாள் - பொங்கல் மகிழ்நாள் நல்வாழ்த்துகள். கழக ஆட்சி மலர்ந்து கொண்டாடும் முதல் பொங்கல் திருநாளில் மேலும் மேலும் தமிழ்நாட்டை மேன்மையுறச் செய்யும் ஊக்கத்தைப் பெறுகிறேன். உங்கள் அன்பால் ஊக்கத்தை உழைப்பாய் மாற்றிடுவேன். இயற்கையோடு இயைந்து தமிழர்கள் நாம் கொண்டாடும் பொங்கல் திருநாளான இன்று, பிளாஸ்டிக் பைகளை இனிப் பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டு, மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துவோம்" என அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு இன்று பொங்கல் விடுமுறை

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



Post a Comment

Previous Post Next Post