பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்து

பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'உலகிற்கே உணவு அளிக்கும் உன்னத தொழில் செய்யும் உழவர்களின் மேன்மையை போற்றும் அறுவடை திருநாளில், தமிழர்கள் இல்லங்களில் அன்பும், அமைதியும், வளமும், நலமும் பெருகி மகிழ்ச்சி பொங்கட்டும். அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த பொங்கல் திருநாள் வாழ்த்துகள்' என்று தெரிவித்துள்ளார்.

image

எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட மற்றொரு பதிவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - புகாரை அடுத்து மாடுபிடி வீரர்களுக்கு மரியாதை

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



Post a Comment

Previous Post Next Post