பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா தொடங்கியது

கொரோனா கட்டுப்பாடுகளால் பழனி முருகன் கோயில் தைப்பூச திருவிழா பெரியநாயகி அம்மன் கோயிலில் பக்தர்களின்றி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

10 நாட்கள் நடைபெறும் தைப்பூச திருவிழாவில் மண்டகப்படிதாரர்களுக்கு அனுமதியில்லை என்றும் ஆகம விதிப்படி அனைத்து நிகழ்வுகளும் நடைபெறும் எனவும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ள முக்கிய திருவிழாவான தைப்பூசத் தேரோட்டத்திற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை. எனவே பக்தர்கள் திருக்கோயில் வலைதளத்தின் மூலமாகவும், நேரலை ஒளிபரப்பு மூலமாகவும் பார்த்து தரிசனம் செய்யலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்தால் நடவடிக்கை - தாம்பரம் காவல் ஆணையர் எச்சரிக்கை 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



Post a Comment

Previous Post Next Post