
பார்வை மாற்றுத்திறனாளியான பாரதி அண்ணா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மதுராந்தகம் அடுத்த பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் பலராமன் பத்மாவதி தம்பதியின் மூத்த மகனான பாரதி அண்ணா சட்டம் பயின்றவர். நீண்டநாட்களாக கண்பார்வை பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்பு 100 விழுக்காடு பார்வை திறனை இழந்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியில் மாவட்டச் செயலாளராக சில ஆண்டுகாலம் பணியாற்றிய இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வந்தார்.
இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்டச் செயலாளராக பாரதி அண்ணா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்தால் நடவடிக்கை - தாம்பரம் காவல் ஆணையர் எச்சரிக்கை
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News