"இந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம் இல்லை" - மா. சுப்பிரமணியன்

''மருத்துவக் கல்லூரிகளுக்கு திமுக ஆட்சிக்காலத்தில்தான் அரசாணை வெளியிடப்பட்டது. மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்பது திமுக ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்ட திட்டம்'' என்று கூறியுள்ளார் மா. சுப்பிரமணியன்.

சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறுகையில், ''அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். சிறாருக்கு தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் நாட்டுக்கே முன்னோடியாக இருக்கிறது. முன்களப் பணியாளர்கள் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவேண்டும். இந்த வாரம் பொங்கல் பண்டிகையையொட்டி மெகா தடுப்பூசி முகாம் இல்லை. மெகா தடுப்பூசி முகாம் இல்லாவிட்டாலும் தடுப்பூசி செலுத்திக்கொள்வோருக்கு எந்த தடையும் இல்லை.

மருத்துவக் கல்லூரிகளுக்கு திமுக ஆட்சிக்காலத்தில்தான் அரசாணை வெளியிடப்பட்டது. மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்பது திமுக ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்ட திட்டம்'' என்றார்.

இதையும் படிக்க: ’அருகில் வசிப்பவர்கள் போகிக்கு பழைய பொருட்களை எரிக்காதீர்கள்’-சென்னை விமான நிலைய நிர்வாகம்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



Post a Comment

Previous Post Next Post