மதுரை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஜி.எஸ் ராம்பாபு காலமானார்

மதுரையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஜி.எஸ் ராம்பாபு கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஏ. ஜி. எஸ். ராம்பாபு, மூன்று முறை மதுரை மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். முதன் முறையாக 1989இல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாக மதுரை மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாம் முறையாக 1991இல் மீண்டும் காங்கிரஸ் கட்சி சார்பாக மதுரையில் போட்டியிட்டு இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

image

மூன்றாம் முறையாக மீண்டும் 1996இல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டு வென்று மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினரானர் இவர். தற்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளராக இருந்தவர், கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளார்.

முன்னதாக, 1980 மற்றும் 1984 ஆம் ஆண்டுகளில் ராம் பாபுவின் தந்தை ஏ.ஜி.சுப்புராமன் மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post