முழு ஊரடங்கு எதிரொலி: நாளை குறைந்த அளவு ரயில் சேவை

தமிழ்நாட்டில் நாளை முழு முடக்கம் அமல்படுத்தப்பட உள்ளதால் சென்னையில் குறைந்த அளவிலான மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஞாயிற்றுக் கிழமை முழு முடக்கம் என்பதால் சென்னையிலிருந்து புறநகர்களுக்கு மொத்தம் 343 ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணத்திற்கு 113 சேவைகளும், கும்மிடிபூண்டிக்கு 60 சேவைகளும், சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரிக்கு 30 சேவைகளும், செங்கல்பட்டுக்கு 120 சேவைகளும் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட அனைத்து முன்பதிவு டிக்கெட் கவுன்ட்டர்களும் செயல்படாது எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post