தமிழகத்தில் 18ஆம் கட்ட மெகா கொரொனா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் இன்று 18ஆம் கட்ட மெகா கொரொனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனாவை எதிர்கொள்ள சிறந்த ஆயுதம் தடுப்பூசி செலுத்திக்கொள்வதுதான் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். மக்கள் எளிதாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம்களை நடத்தி வந்தது. எனினும் நாளை முழு முடக்கம் அமல்படுத்தப்படவுள்ளதை கருத்தில் கொண்டு இன்றே மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்திருந்தார்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங்களில் இன்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. பொதுமக்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

Post a Comment

Previous Post Next Post