முதுமலை வனப்பகுதியில் புலிகளை கண்டு மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்

முதுமலை வனப்பகுதிக்குள் ஜீப்பில் சபாரி சென்ற சுற்றுலாப் பயணிகள் புலியை அருகில் கண்டு ரசித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட புலிகள் உள்ளன. இருப்பினும் புலிகளை அரிதாக தான் காணமுடிகிறது. குறிப்பாக வனப்பகுதிக்குள் சவாரி செல்லும் சுற்றுலாப் பயணிகள் புலிகளை அவ்வளவு எளிதாக காண முடிவதில்லை.

image

இந்நிலையில் நேற்று வனப்பகுதிக்குள் ஜீப்பில் சபாரி சென்ற சுற்றுலாப் பயணிகள் புலியை மிக அருகில் கண்டு ரசித்துள்ளனர். புலியும் சிறிதும் அச்சமின்றி அதேப் பகுதியில் நின்று சுற்றுலாப் பயணிகளுக்கு நீண்ட நேரமாக காட்சி அளித்து இருக்கிறது. சுற்றுலாப் பயணிகளும் புலியை தொந்தரவு செய்யாமல் கண்டு ரசித்து மகிழ்ந்துள்ளனர்.

கோப்பு படங்கள்

தொடர்புடைய செய்தி : 5 மாதங்களுக்குப் பிறகு திகார் சிறையில் மீண்டும் கொரோனா - 8 பேர் பாதிப்பு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



Post a Comment

Previous Post Next Post