
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார்.
ஜனவரி ஒன்றாம் தேதியை தகுதி நாளாக கொண்டு இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் கடந்த ஆண்டு முதலே மேற்கொள்ளப்பட்டன. அதன்பின்னர் புதிய வாக்காளர்கள் சேர்க்கை, திருத்தம் மேற்கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை 10 மணிக்கு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். அந்ததந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வெளியிடுவர் எனவும் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Tags:
News