கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகளுக்கு தடை

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கன மழையால் பெரியகுளம் கும்பக்கரை அருவியில் மீண்டும் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவிக்கு மேல் உள்ள மேற்கு தொடர்சி மலைப்பகுதியில் கடந்த 15 நாட்களாக மழை பெய்யாத நிலையில், அருவியில் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் வட்டக்காணல், கொடைக்கானல் உள்ளிட்ட நீர் பிடிப்பு பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.

image

இதன் காரணமாக கும்பக்கரை அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கும்பக்கரை அருவிக்கு கீழ் உள்ள கண்மாய்கள் அனைத்தும் ஏற்கனவே நீர் நிறைந்து வழிந்து வருவதால் கும்பக்கரை அருவியில் வரும் நீர் அப்படியே பாம்பாற்றில் சென்று வராக நதி ஆற்றில் கலந்து வருகிறது.

image

கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியில்லை.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



Post a Comment

Previous Post Next Post