ஒமைக்ரான் தொற்று எதிரொலி - கலைவாணர் அரங்கில் நடக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் கலைவாணர் அரங்கில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டின் முதல் கூட்டம் வரும் ஐந்தாம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் கூட்டம் நடக்கும் என தெரிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.

image

இந்த நிலையில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் மீண்டும் கலைவாணர் அரங்கிற்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



Post a Comment

Previous Post Next Post