'நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி தொடரும்' - முத்தரசன்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் திமுகவுடனான கூட்டணி தொடரும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் திமுக தலைமை அலுவலகத்தில் சந்தித்து பேசினார். சுமார் 20 நிமிடம் நீடித்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், பெருமழையால் அறுவடையை செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கவேண்டும் என வலியுறுத்தியதாக கூறினார். மத்திய அரசிடம் மழை நிவாரணம் கோரி பலமுறை மனு அளித்தும், நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியும் பாரபட்சமாக செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டார். நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தொகுதி பங்கீடு அந்தந்த மாவட்டங்களில் பேச்சுவார்த்தை மூலம் முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.

இதையும் படிக்க: உயர் வகுப்பினருக்கான ரூ.8லட்சம் உச்சவரம்பு சரியானதே - மத்திய அரசு குழு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



Post a Comment

Previous Post Next Post