கொலை செய்து குப்பைத் தொட்டியில் போட்டு தீயிட்டு எரிக்கப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலமாக மீட்கப்பட்டார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள காமாட்சிபுரம் கிராமத்தில் சாலையோரம் உள்ள குப்பைத் தொட்டியில் தீயிட்டு எரிக்கப்பட்ட நிலையில் ஆண் பிணம் கிடப்பதாக வந்த தகவலையடுத்து பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை செய்தனர்.
குப்பைத் தொட்டியில் கிடந்த ஆண் சடலம் கடுமையாக தாக்கிக் கொலை செய்து குப்பைத் தொட்டியில் போட்டு தீயிட்டு எரிக்கப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சடலத்தை கைப்பற்றிய போலீசார், தீயிட்டு எரிக்கப்பட்ட அந்த ஆண் யார் என முதற்கட்ட விசாரணையை துவக்கியுள்ளனர்.
இதையடுத்து கொலை செய்யப்பட்டவர் யார் என்பது தெரிந்த பின்பு கொலைக்கான காரணங்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News