ராமநாதபுரம்: குடும்பத் தகராறில் மனைவி கொலை; கணவன் தூக்கிட்டு தற்கொலை

மனைவியை கிரைண்டர் கல்லால் தாக்கி கொலை செய்துவிட்டு கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியை அடுத்த அடஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் லாட முருகன். கடல் தொழில் செய்து வரும் இவருக்கும், இவரது மனைவி முத்துலட்சுமிக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று இரவு முத்துலட்சுமியை, லாட முருகன் கிரைண்டர் கல்லால் தாக்கி கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

image

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஏர்வாடி காவல் துறையினர் இருவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post