
முன்களப் பணியாளர் என்ற முறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொண்டார்.
இந்தியா முழுவதும் பூஸ்டர் ‘டோஸ்’ எனப்படும் 3-வது டோஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நேற்று தொடங்கியது. தமிழ்நாட்டிலும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பூஸ்டர் ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்தும் பணிகள் நேற்று முதல் தொடங்கியது. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக முன்களப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்கள் உடையவர்களுக்கு பூஸ்டர் ‘டோஸ்’ செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் முன்களப் பணியாளர் என்ற முறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொண்டார். ஏற்கெனவே 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட அவர் இன்று பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொண்டார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினின் ட்விட்டர் பதிவில், ''அனைத்து முன்களப் பணியாளர்களும், இணை நோய்கள் கொண்ட 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களும் தவறாமல் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளுங்கள். தடுப்பூசி எனும் கவசத்தைக் கொண்டு நம்மையும் காப்போம்; நாட்டையும் காப்போம்'' என்று கூறியுள்ளார்.
இதையும் படிக்க: ஜல்லிக்கட்டு: 150 பார்வையாளர்களுக்கு மட்டும்அனுமதி-2 டோஸ் தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம்
“கொரோனாவிலிருந்து நம்கை காக்கும் ஆயுதம் தடுப்பூசி. இனியும் தாமதம் இல்லாமல் உடனே கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வோம்”
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News