பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடங்கியது

பொங்கல் பண்டிகையை கொண்டாட ஏதுவாக, சென்னையில் இருந்து இன்று காலை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடங்கியது.

சென்னையில் கோயம்பேடு, பூந்தமல்லி, மாதவரம், கே.கே.நகர்,  தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையங்களில் இருந்து வெளிமாநிலங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இன்று வழக்கமான பேருந்துகள், சிறப்பு பேருந்துகள் சேர்த்து சென்னையில் இருந்து 2 ஆயிரத்து 520 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  

image

இந்த நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து காலை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடங்கியது. எனினும் பயணிகள் வரத்து குறைவாகவே இருந்த நிலையில், இனி கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என்பன உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பேருந்துகள் இயக்கம் மற்றும் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



Post a Comment

Previous Post Next Post