
கால்கள் தேய்ந்தாலும் பரவாயில்லை தமிழ்நாடு முழுவதும் பாதயாத்திரை செல்வோம். போர்வையோடு கிளம்பப் போகிறோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 97வது பிறந்த நாள் விழாவை பாஜக நல்லாட்சி தினமாக கொண்டாடி வருகின்றனர். சென்னையில் நடைபெற்ற விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 5 நபர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை...

இந்தியாவில் 2014 முதல் 2017 வரை திருடுபோன 24 சிலைகளை மீட்டு இந்தியாவுக்கு, கொண்டு வந்துள்ளார். 200 நாடுகளில் உள்ள சிலைகளை இதே போல் மீட்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1 மெகா வாட் சோலார் யூனிட் போட வேண்டும் என்றால் 20 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. கல்லா கட்டும் வேலையைத் தான் இங்கு உள்ளவர்கள் செய்து வருகின்றனர்.

வரும் 13. 14 ஆம் தேதி மதுரையில் தங்கப் போவதாக தெரிவித்த அண்ணாமலை, பாஜகவினர் இதே போல தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களில் தங்கி அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும், கால்கள் தேய்ந்தாலும் பரவாயில்லை போர்வையுடன் கிளம்பி கிராமம் கிராமமாக செல்லப் போகிறேன் என்று பேசினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News