விழுப்புரம்: குட்டையில் தவறி விழுந்த அக்கா, தங்கை உட்பட 3 சிறுமிகள் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே குட்டையில் மூழ்கி அக்கா, தங்கை உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செஞ்சியை அடுத்த போந்தை கிராமத்தைச் சேர்ந்த ஹேமாவதி (7) கலையரசி (10) சுபாஷினி (10) ஆகிய மூவரும் விவசாயி நிலத்தின் அருகேயுள்ள குட்டையில் குளிக்க சென்றனர். அப்போது குட்டையில் தவறி விழுந்து மூவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

image

இதையடுத்து மூவரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செஞ்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



Post a Comment

Previous Post Next Post