
சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்த ரயில் பயணிகளுக்கு வீடுகளுக்கு திரும்ப வாகனங்கள் கிடைக்காததால் அவதி அடைந்தனர்
முழு பொது முடக்கம் அமலில் இருக்கும் நிலையில் இன்று விமானம், ரயில்சேவை மட்டும் இருக்கிறது. இந்த இடங்களுக்கு செல்லும் மக்கள் தங்கள் வாகனம், வாடகை வாகனத்தில் செல்ல காவல்துறை அனுமதி அளித்து இருக்கிறது. ஆனால் வெளி மாவட்டத்தில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்த பொதுமக்களுக்கு வாகனம் கிடைக்காமல் அவதி அடைந்தனர். பலர் 1 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் நிலை இருந்தது.
அதேபோல் ஒலா, உபர், பாஸ்ட்ராக் உள்ளிட்ட தளத்தில் முன்பதிவும் கிடைக்கவில்லை. முன்பதிவு ஆனால் கூடுதலான கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்தனர். அதேபோல் ஆட்டோ இயக்கினால் அபராதம் வசூலிப்பதால் தான் எழும்பூர் பகுதியில் இருந்து ஆட்டோ இயக்கவில்லை என ஆட்டோ ஒட்டுனர்கள் கூறினர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM