ஊரடங்கு விதிகள் பின்பற்றப்படுகிறதா? - சைக்கிளில் சென்று ஆய்வு செய்த புதுக்கோட்டை ஆட்சியர்

புதுக்கோட்டையில் ஊரடங்கு விதிகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை சைக்கிளில் சென்று மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆய்வு செய்தார்.

சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு சைக்கிளில் சென்ற ஆட்சியர், கொரோனா தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தினார். முகக் கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அவர், முகக் கவசங்களை வழங்கினார். விதிகளை மீறியோருக்கு விதிக்கப்பட்ட அபராதம் குறித்தும் காவல்துறையினரிடம் புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு கேட்டறிந்தார்.

இதையும் படிக்க: வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாக ஓபிஎஸ், ரவீந்திரநாத் எம்பி மீது வழக்குப்பதிவு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



Post a Comment

Previous Post Next Post