'மிஸ் யூ' எனும் பெயரில் கவிஞர் மனுஷ்ய புத்திரன் எழுதியுள்ள நெடுங்கவிதை தொகுப்பு விரைவில் இணைய புத்தகமாகவும் அச்சு புத்தகமாகவும் வெளிவர உள்ளது.
2,300 பக்கங்களுக்கு மேல் 1,850 கவிதைகளைக் கொண்ட 'மிஸ் யூ' எனும் கவிதைத் தொகுப்பு நூலை பிரபல நவீன கவிஞர் மனுஷ்யபுத்திரன் எழுதியுள்ளார். தமிழ் மட்டுமின்றி இந்திய மொழிகளில் இவ்வளவு அதிகம் பக்கங்கள் கொண்ட கவிதை புத்தகங்கள் வெளிவர வெளியாவது இதுவே முதல் முறை. ஆறாம் தேதி தொடங்கவிருந்த சென்னை புத்தக கண்காட்சியில் இந்த புத்தகத்தை வெளியிடுவதற்காக திட்டமிடப்பட்டது. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக புத்தகக் கண்காட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனவரி மாதம் இணைய புத்தகமாகவும் அச்சு புத்தகமாகவும் வெளிவரும் என மனுஷ்யபுத்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் பத்து மாதங்களில் நவீன தமிழ் வார்த்தைகள் பிரயோகங்கள் கொண்டு எளிமையான நடையில் எழுதப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் சமூக வலைதளங்களிலும் பயணங்களின் போதும் எழுதப்பட்ட கவிதைத் தொகுப்புகள் இந்த புத்தகத்திற்கு என பிரத்தியேகமான கவிதைகளும் வைக்கப்பட்டுள்ளதாக கவிஞர் மனுஷ்யபுத்திரன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: சென்னை சர்வதேச திரைப்படவிழா : முதல்நாளில் கவனம் ஈர்த்த இந்தோனேசியா, ஆப்கன் திரைப்படங்கள்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM