
கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக வானதி சீனிவாசன் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கோவை தொகுதியில் போட்டியிட்ட இந்துஸ்தான் ஜனதா கட்சியின் தென் மண்டல தலைவரான கே.ராகுல் காந்தி இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். அவர் மனுவில், தமிழக சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு 53,209 வாக்குகள் பெற்ற வானதி சீனிவாசன் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டதாகவும், தனக்கு 73 வாக்குகள் மட்டுமே பதிவானதாக அறிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். தேர்தலுக்கு முன்பாக வானதி சீனிவாசனுக்கு எதிராக எதிர்ப்பலை நிலவிய சூழலில், அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்துதான் மூலம் தான் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றுள்ளதாகவும், அதனால் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டுமென மே 3-ஆம் தேதியே தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
எனவே தனது மனுவை பரீசீலித்து, மறுவாக்கு எண்ணிக்கை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டுமென ராகுல்காந்தி கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி. பாரதிதாசன் தேர்தல் வழக்கில் எந்த ஒரு ஆதாரங்களும் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News