
தேர்தல் சீர்திருத்த மசோதாவிற்கு திமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள கலையரங்கம் வளாகத்தில் இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ், லேண்ட் டெவலப்பர்ஸ், நிலத் தரகர்கள் நல சங்கத்தின் சார்பில் மாநாடு நடைபெற்றது, இதில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசும்போது...

கட்டுமான நல சங்கத்தினர் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை - நிலத்தரகர்களை அமைப்பு சாரா தொழிலாளர் பட்டியலில் இணைக்க வேண்டும் என்பதாகும். இது நியாயமான கோரிக்கை எனவே தமிழக அரசு அவர்களை அமைப்புசாரா தொழிலாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
மக்களவையில் நாளை தேர்தல் சீர்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட இருக்கிறது பல்வேறு மசோதக்களை தாக்கல் செய்தாலும், இந்த மசோதவை தாக்கல் செய்வதை அறிமுக நிலையிலேயே தடுக்க வேண்டும். திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சியினருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விடுக்க கூடிய கோரிக்கை இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை விட வேண்டும்.

இந்த சட்ட திருத்த மசோதா வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்னோடு இணைப்பதற்கு வழிவகை செய்கிறது. இது மிகவும் ஆபத்தானது, தேர்தல் நேரத்தில் அவர்களுக்கு வாக்களிக்க சிறுபான்மையினரை நீக்குவதற்கு இது ஏதுவாக அமைந்துவிடும். எனவே இது மிகவும் ஆபத்தான மசோதா, இதை அனைத்து கட்சிகளும் ஜனநாயக சக்திகளும் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News