
ஆருத்ரா தரிசனத்தையொட்டி சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பு வழிபாடு நடத்தினார்.
மார்கழி மாதத்தில் திருவாதிரையும், பெளர்ணமியும் இணையும் நாளில் சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நாளில் ஆறுவிதமான திரவியங்களால் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடக்கும். இதைத் தொடர்ந்து அந்தந்த கோயில்களில் உள்ள மண்டபங்களில் நடராஜர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசனத்தையொட்டி, சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதிகாலையிலேயே கோயிலுக்குச் சென்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நடராஜரை தரிசித்து சிறப்பு வழிபாடு நடத்தினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Tags:
News