
கழிவறை சுவர் இடிந்து விழுந்த திருநெல்வேலி சாஃப்டர் பள்ளிக்கு தடையின்மைச் சான்று முறையான ஆய்வுக்குப் பின் வழங்கப்பட்டதா என கேள்வி எழுந்துள்ளது.
நெல்லை சாஃப்டர் மேல்நிலைப்பள்ளிக்கு தீயணைப்புத்துறை சார்பில் 29-01-2021 அன்று தடையின்மை சான்று வழங்கப்பட்டுள்ளது. சுகாதார சான்றிதழில் தீயணைப்புத்துறையின் சான்றிதழ் அளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் கொடுக்கப்பட்ட சுகாதார சான்றிதழில் கட்டட நிலைத்தன்மைக்கு சான்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பள்ளிக்கு சுகாதாரத்துறை சார்பிலும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. தீயணைப்புத்துறையின் சார்பில் 19-01-2021 அன்று ஆய்வு செய்ததாக தடையின்மை சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கூறுகையில், ''சாஃப்டர் பள்ளி கட்டடம் முறையாக ஆய்வு செய்யப்பட்டதா என சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு வருகிறது. வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் தொழில்நுட்பக் குழு அமைத்து ஆய்வு செய்து வருகிறோம். முறையாக ஆய்வு செய்யப்படாதது குறித்து கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என அவர் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Tags:
News