
கேரளாவில் பறவைக் காய்ச்சல் அதிகரித்துவரும் நிலையில் நீலகிரி மாவட்டத்தையொட்டி தமிழக எல்லையில் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் பறவைக் காய்ச்சலால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனையொட்டி நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களின் எல்லை சோதனைச் சாவடியில் நோய்த் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கக்கநல்லா சோதனைச் சாவடியிலும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னர் நீலகிரி மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றன. மேலும் கோழிகள், பறவைகள் மற்றும் அதற்கான தீவணங்களை ஏற்றிவரும் வாகனங்களை அதிகாரிகள் திருப்பி அனுப்புகின்றனர்.
16 டன் முந்திரி பருப்பு கடத்தல் வழக்கு - முன்னாள் அமைச்சரின் மகன் மீது குண்டர் சட்டம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Tags:
News