கடலூர் கண்ணகி - முருகேசன் ஆணவ கொலை விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குறித்த அவதூறு கருத்துக்களை வெளியிட உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பாஜகவை சேர்ந்த தடா பெரியசாமி, முருகேசனின் தந்தை சாமிக்கண்ணு உள்ளிட்ட எட்டு பேருக்கு எதிராக திருமாவளவன் தொடர்ந்த வழக்கில் நீதிபதி அப்துல் குத்தூஸ் உத்தரவிட்டுள்ளார். மேலும், எதிர் மனுதாரர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஜனவரி 20 ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தடா டி. பெரியசாமி, சாமிக்கண்ணு, வழக்கறிஞர் பி.ரத்தினம், மண்ணுரிமை மீட்பு இயக்கம் என்ற முகநூல், ஆதவன் தீட்சன்யாவின் தந்துகி என்ற ப்ளாக்ஸ்பாட் ஆகியவற்றிற்கு எதிராக ரூ. 1 கோடி மான நஷ்ட ஈடு கோரியும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கண்ணகி - முருகேசன் ஆணவக்கொலை வழக்கை ஒன்றுமில்லாமல் ஆக்குவதற்கான முயற்சிகளில் விசிக ஈடுபட்டது என்றும் ஆதிக்க சாதிகளுக்கு ஆதரவாகத் திருமாவளவன் பேரம் பேசினார் என்றும் சர்ச்சையானது.