தமிழகத்தில் தற்போதைய சூழலில் இரவு ஊரடங்கை அமல்படுத்துவதற்கு வாய்ப்பில்லை என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் ஓமைக்ரான் பரவத் தொடங்கியுள்ள நிலையில், கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, பொங்கல் விழா என கொண்டாட்டங்களும் நெருங்கி வருகின்றன. இந்நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள், தளர்வுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பண்டிகை கால கட்டுப்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவத்துறை வல்லுநர்கள், அரசு துறை முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டது. மருத்துவ நிபுணர்கள் பல்வேறு பரிந்துரைகளையும் வழங்கியுள்ளனர்.
கோவை: பாலியல் தொல்லை செய்த ஆசிரியரை கைது செய்யக்கோரி மாணவர்கள் சாலை மறியல்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News