ஓபிஎஸ் கூறிய கதை சசிகலாவுக்கு பொருந்தாது - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

மனித குலம் தோன்றியது முதல் தவறிழைத்தல் இயல்பு. ஆனால் திருந்தி வாழுவது மனித குலத்தின் சிறப்பு. சசிகலாவிற்கு மன்னிப்பே கிடையாது என்பதில் ஒருங்கிணைப்பாளரும் உறுதியாகவே இருக்கிறார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அதிமுக சார்பில் சென்னை சேத்துப்பட்டில் உள்ள முதியோர் இல்லத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது...

image

சிறுபான்மையினரை உணர்வுப்பூர்வமாக நேசிக்கும் இயக்கம் அதிமுக. பாபர் மசூதி இடிப்பை தொடர்ந்து இந்தியாவில் சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டனர். அப்போது ஜெயலலிதா அரசு தமிழகத்தில் முழுமையான பாதுகாப்பு வழங்கி சிறுபான்மையினரை காத்தது. ஓபிஎஸ் கூறிய கதைக்கு கண் காது மூக்கு வைத்து உருவம் கொடுக்காதீர். அந்த கதை பாமரர்களுக்கே பொருந்தும், சசிகலாவுக்கு பொருந்தாது. சசிகலா இணைப்பு குறித்த அதிமுக உட்கட்சி விவகாரத்தில் அண்ணாமலை கருத்து கூறக்கூடாது, கருத்து கூறினால் அது தவறு.

image

உதயநிதி, இன்பநிதி, சபரீசன், கனிமொழி பெயர்களில் காம்ப்ளக்ஸ்களை திமுக புதிதாக உருவாக்கிக் கொள்ளட்டும். ஆனால், ஜெயலலிதா பெயரில் உள்ள கட்டட பெயரை மாற்ற வேண்டாம்.

அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையாக வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது’' என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post