ராசிபுரத்தை அடுத்த ஈச்சம்பாறை அருகே உள்ள கல்குவாரி குட்டையில் நீச்சல் பழகிய மாணவன் நீரில் மூழ்கி பலியானார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த அரியாகவுண்டம் பட்டியைச் சேர்ந்த கிருஸ்ணன் என்பவரது மகன் சுராஜ் (16). இவர், நாமகிரிபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இன்று பள்ளிக்குச் செல்லாமல் நன்பருடன் ஈச்சம்பாறை கல்குவாரி குட்டையில் குளிக்க சென்றுள்ளனர்.
இந்நிலையில், சுராஜ் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளார். இதில், நீச்சல் தெரியாத சுராஜ் நீரில் மூழ்கி பலியானார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் மற்றும் காவல் துறையினர் உடனடியாக சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமணைக்கு கொண்டு சென்றனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக நாமகிரிபேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.