மதுரை ஜல்லிக்கட்டு போட்டி: சிறப்பு விருந்தினராக முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு

மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஜல்லிக்கட்டு பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

மதுரையில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டுப் பேரவையின் 15-வது மாநில பொதுக்குழு கூட்டம் மதுரை மேலமடை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கல்விக்கட்டுப் பேரவைத் தலைவர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்குழு கூட்டத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, ராம்நாடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

image

இதில், மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தமிழக முதல்வரை அழைப்பது, தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி நடத்தி வரும் தமிழக அரசை பாராட்டுவது, ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகளை மட்டுமே அமைதிக்கப்படும் என அறிவித்த அமைச்சருக்கு நன்றி கூறுவது, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தருமபுரி திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோருதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

image

பொதுக்குழு கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜல்லிக்கட்டு பேரவையின் தலைவர் ராஜசேகர் பேசும்போது... தமிழ்நாடு முழுவதும் 600 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற நிலையில், தற்போது 100 இடங்களுக்கு கீழ்தான் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. எனவே பொது இடத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அந்தந்த மாவட்ட ஆட்சியர் அனுமதி தர வேண்டும். அதே போன்று மதுரை மாவட்டம் சக்குடியில் சில ஆண்டுகளாக தடைப்பட்டிருக்கும் ஜல்லிக்கட்டை நடத்த அரசு மற்றும் மாவட்டம் நிர்வாகம் அனுமதிதர வேண்டும் என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post