
குளித்தலை அருகே கம்மநல்லூரில் குடும்ப பிரச்னையில் மைத்துனரை பீர் பாட்டிலில் குத்தி கொலை செய்த அக்கா கணவர் சிவசூரியன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கம்மநல்லூரைச் சேர்ந்த விஜய் (25) கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது அக்காவை தொட்டியத்தை சேர்ந்த சிவசூரியனுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இரு குழந்தைகளுடன் சிவசூரியனும் கம்மநல்லூரில் வசித்து வருகிறார்.விஜய்க்கும், சிவசூரியனுக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், விஜய்யும் அவரது அக்காள் கணவரான சிவசூரியனும் மது அருந்தியுள்ளனர்.

இதையடுத்து வீட்டிற்கு செல்லும் வழியில், இருவருக்கும் குடும்பத்தகராறு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தில் சிவசூரியன் பீர் பாட்டிலை உடைத்து விஜயின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் கழுத்தில் பலத்த காயமடைந்த விஜய் சம்பவ இடத்தில் இறந்துவிட்டார். இதனை தொடர்ந்து குளித்தலை டிஎஸ்பி ஸ்ரீதர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். லாலாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவசூரியனை கைது செய்து குளித்தலை குற்றவியல் எண் 2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குளித்தலை கிளை சிறையில் அடைத்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News