பொங்கலை முன்னிட்டு அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடங்கியது-Booking of government buses has started ahead of Pongal

பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் செல்ல இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
முக்கிய ஊர்கள் மற்றும் 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊர்களுக்கு மட்டும் செல்பவர்கள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். WWW.TNSTC.IN என்ற இணையதளம் மூலமாக முன்பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பெங்களூரு, திருப்பதிக்கு செல்லவும் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விவரங்களுக்கு தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு கேட்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post