
சென்னையில் உள்ள அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகத்தின் (ஏஐசிடிஇ) மண்டல அலுவலக ஆள்சேர்ப்பு அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு வட்ட அல்லது மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மண்டலத் தலைமை அலுவலர்கள், மண்டல அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்துப் பணியிடங்களுக்கும் ஆள்சேர்ப்பு நடைபெறுவதாக வந்துள்ள செய்திகள் மற்றும் விளம்பரங்கள் போலியானது எனவும் பொதுமக்கள் இதை நம்ப வேண்டாம் எனவும் ஏஐசிடிஇ கூறியுள்ளது.

ஆள்சேர்ப்பு குறித்த போலியான செய்திகள் மற்றும் விளம்பரங்கள் வெளியாகியிருப்பது குறித்து தங்கள் கவனத்திற்கு வந்துள்ளது எனவும். இத்தகைய ஆள்சேர்ப்புக்கான அறிவிப்பு எதையும் ஏஐசிடிஇ அதிகாரபூர்வ மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது www.aicte.india.org என்ற இணைய தளத்திலோ வெளியிடப்படவில்லை. எனவே இத்தகைய போலியான அறிவிப்புகளுக்கு ஏஐசிடிஇ பொறுப்பாகாது. இதுகுறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் எனவும் ஏஐசிடிஇ கூறியுள்ளது.
மேலும் இத்தகைய போலி நபர்களுக்கு எதிராக சட்டப்பூர்வ குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஏஐசிடிஇ மண்டல அலுவலர் எம்.சுந்தரேசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.
Source : PIB
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News